'Mudakkathaan Keerai dhosai I முடக்கத்தான் கீரை தோசை I FOOD COMA'

05:47 Dec 16, 2021
'தோல் வியாதிகள்  முடக்கத்தான் கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. முடக்கத்தான் கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் பற்று வைத்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.   மூலம்  நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உண்பது, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்ற காரணங்களால் சிலருக்கு மூலம் நோய் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் பச்சையாக சிறிது முடக்கத்தான் கீரைகளை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும். மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக முடக்கத்தான் செயல்படுகிறது. இந்த முடக்கத்தான் கீரையை மைய அரைத்து குழந்தை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.   காது வலி  சீதோஷண மாற்றங்களாலும், வேறு சில காரணங்களாலும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காது வலி ஏற்படுகிறது. முடக்கத்தான் கீரைகளை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை காதுகளுக்குள் விட காது வலி நீங்கும்.   மூட்டு வலி  முடக்கத்தான் கீரையை பக்குவப்படுத்தி சாப்பிட உடலில் இருக்கும் வாதத் தன்மையை கட்டு படுத்தி உடலிலுள்ள அனைத்து மூட்டுகளின் வலியை போக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில் நனைத்து அனைத்து மூட்டு பகுதிகளிலும் தேய்த்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.   புற்று நோய்  புற்று நோயாளிகளுக்கு அவர்களின் உடலின் புற்று செல்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். முடக்கத்தான் கீரையை புற்று நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் புற்று செல்கள் மீண்டும் வளராமல் தடுத்து, அந்நோயின் கடுமை தன்மையை குறைக்க முடியும்.   தலைவலி  ஜலதோஷம் மற்றும் இன்ன பிற காரணங்களால் சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படுகிறது. தலைவலியால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி, வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.   பொடுகு  தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலானவர்களுக்கு தலையில் பொடுகு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முடக்கத்தான் இலைகளை கொண்டு செய்யப்பட்ட எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.   விரை வீக்கம்  “ஹைட்ரோஸீல்” எனப்படும் விரைவீக்கம் ஆண்களுக்கு விரைப்பைகளில் நீர் கோர்த்துகொள்வதால் ஏற்படும் ஒரு வியாதியாகும். இப்பாதிப்பால் அவதிப்படுபவர்கள் தினந்தோறும் முடக்கத்தான் கீரையின் இலைகளை விரைபையின் மீது வைத்து, துணியால் கட்டு போட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.  இப்படிக்கு   பானு \'ஸ் குக்கிங் சேனல் +919443850019' 

Tags: #healthyfood , #easyfood , #tastyfood , #traditionalfood , #Tamilcookingchannel , #Foodasmedicine , #Tamilfood , #Coldmedicine , #Foodmedicine , #Ammasamayal , #Yummytummy , #Yummytummysamayal , #Mudakkathaan , #Mudakathaan

See also:

comments